Feb 01, 2020 03:31 AM

தர்ஷனுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க சனம் ஷெட்டி இதை செய்தாரா? - அதிர்ச்சியில் திரையுலகம்

தர்ஷனுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க சனம் ஷெட்டி இதை செய்தாரா? - அதிர்ச்சியில் திரையுலகம்

‘அம்புலி’, ’விலாசம்’, ‘கதம் கதம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் சனம் ஷெட்டி. இவரும், பிக் பாஸ் பிரபலம் தர்ஷனும் காதலிப்பது அனைவரும் அறிந்தது தான். அதேபோல், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தர்ஷன், சனம் ஷெட்டியை கழட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. சனமும், அவ்வபோது தர்ஷன் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருத்தப்படுவார்.

 

இந்த நிலையில், தர்ஷன், சனம் ஷெட்டியை பல வகையில் நன்றாக பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துள்ளார். மேலும், சனம் ஷெட்டீக்கும், தர்ஷனுக்கும் திருமணம் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது தர்ஷன் திருமணத்தை நிறுத்திவிட்டாராம்.

 

இது தொடர்பாக தர்ஷன் மீது புகார் அளித்திருக்கும் சனம் ஷெட்டி, “தர்ஷனுக்கு பிக்பாஸ் வாய்ப்பு பெற்றுக்கொடுத்ததே நான் தான். அவர் என்னை நன்றாக பயன்படுத்திக்கொண்டு தற்போது தூக்கி எறிந்துவிட்டார் என்பது போல தான் தோன்றுகிறது. அவருக்கு பல உதவிகள் செய்துள்ளேன். நிச்சயதார்த்தத்திற்கு கூட நான் தான் 5 லட்சம் செலவு செய்தேன். அவருக்கு கோல்டு மற்றும் ஐபோன் வாங்கி கொடுத்தேன்.

 

அவரை மகன் போல என் குடும்பத்தினர் பார்த்து கொண்டனர். ஆனால் அவர் திருமணத்தை நிறுத்தியதை கூட நேரில் வந்து சொல்லவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

 

Darshan Sanam Shetty Engagement

 

மேலும், தர்ஷனின் முன்னேற்றத்திற்காக சனம் ஷெட்டி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக பிக் பாஸில் தர்ஷன் பங்கேற்பதற்காக அவர் செய்த உதவிகள் பல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

தற்போது, பேச தொடங்கியிருக்கும் சனம் ஷெட்டி, தர்ஷன் குறித்து இன்னும் பல பகீர் தகவல்களை கூற தயராகிவிட்டாராம்.