ஹீரோவாகும் இயக்குநர் கெளதம் மேனன்!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் கெளதம் மேனன். ‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தான் இயக்கும் படங்களில் எதாவது ஒரு காட்சியில் தனது முகத்தை லேசாக காட்டுவார். அல்லது பாடல் காட்சிகளில் எங்காயாவது ஒரு இடத்தில் வந்து போவார்.
இப்படி தொடர்ந்து தனது படங்களில் வந்து போனவர், பிறகு பல திரைப்படங்களின் சில காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்தவர், சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசியவர், சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘கோலிசோடா 2’ படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிப்பில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்கும் கெளதம் மேனன், ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் கெளதம் மேனனுக்கு ஜோடி இல்லையாம். காட்பாதர் போன்ற ஒரு வேடத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம்.