May 15, 2020 06:08 PM

மிஷ்கினுக்கு கிடைத்த புது ஹீரோ!

மிஷ்கினுக்கு கிடைத்த புது ஹீரோ!

‘சைக்கோ’ படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன் 2’ வெளியாக இருந்த நிலையில், தற்போது அந்த படத்தை இயக்குநராக மிஷ்கின் முழுவதுமாக சொந்தம் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. காரணம், படத்தின் சில பகுதிகளை நடிகர் விஷாலே இயக்க இருப்பதால், அதில் இயக்குநராக அவர் பெயரும் இடம்பெறும்.

 

விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும், தனது புதிய படத்தின் பணிகளில் மிஷ்கின் தீவிரமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க ரெடியாகும் மிஷ்கின், அப்படத்திற்கான திரைக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, ‘மாநாடு’ படத்திற்குப் பிறகு சிம்புவை மிஷ்கின் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு முடிவடைந்து சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. அதே சமயம், சினிமா படப்பிடிப்பு தொடங்கினாலும், ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் நடக்கும் என்பதால் சிம்புக்காக மிஷ்கின் சுமார் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.

 

இந்த நிலையில், சிம்புக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருப்பதை விட, கிடைக்கும் ஹீரோவை வைத்து ஒரு படத்தை இயக்கி விட நினைத்த மிஷ்கின், அதற்கான முயற்சியில் ஈடுபட்ட, தற்போது அதில் வெற்றியும் பெற்று விட்டாராம்.

 

Arun Vijay

 

ஆம், அருண் விஜய் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க விரும்பம் தெரிவிக்க, மிஷ்கினும் அவரை வைத்து படம் இயக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். அதனால், கொரோனா ஊரடங்கு முடிந்து சினிமா படப்பிடிப்புகள் தொடங்கிய உடன், அருண் விஜயை வைத்து மிஷ்கின் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம். அதற்கான திரைக்கதை உருவாக்கத்தினையும் மிஷ்கின் ஏறக்குறைய முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.