Apr 25, 2020 10:04 AM

கொரனோ...மூன்றாம் உலகப் போர்! - இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகனின் ஆழமான கட்டுரை

கொரனோ...மூன்றாம் உலகப் போர்! - இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகனின் ஆழமான கட்டுரை

உலகம் - ஒரு சங்கிலி.

 

அமெரிக்க - வண்ணத்துப்பூச்சியின் சிறகை பிய்த்தாலும்.. அது கோள்களையும் காயப்படுத்தும்... பிரபஞ்ச அதிர்வையும் ஏற்படுத்தும்.

 

நீ -

கடலில்

கலந்துள்ள துளியல்ல..

துளிக்குள்

ஒழிந்துள்ள

பெருங்கடல் - என்பார் ரூமி.

 

ஒவ்வொரு உயிரும் ., படைப்பின் ரகசியத்தை சுமந்து நிற்கிறது.

 

கொரோனா - சீனாவில் கருத்தரித்து இத்தாலியில் பிரசவமானதா , என்று பட்டி தொட்டி மெங்கும் பட்டி மன்றம் பேசும் நேரமில்லை.

 

வைரஸை கொன்று, மனித உயிர்களை ,வைரங்களாக பாதுகாக்க வேண்டிய போர்க்கால அவசரமிது.

 

அம்மை நோயையும், போலியோவையும் ஒழித்த இந்திய சித்த மருத்துவம்.. கொரனோவின் கொத வளையையும் இறுக்கி கொல்லுமென்று, உலக சுகாதார நிறுவனமும் விழி மேல்-தவமாய் இந்தியாவையே  சேட்டிலைட் இமைகள் மூடாமல் உற்று நோக்குகிறது.

 

கடந்த நூற்றாண்டின் முடிவிலும் - இந்த நூற்றnண்டின் துவக்கத்திலும் ., வைரஸ்கள் ஊழித் தாண்டவமாடி மனித உயிர்களை மண்டை ஓடுகளாக உலர்த்தியிருக்கின்றன.

 

1918 -ல், ஸ்பானிஷ் வைரஸ்சும் தன் பங்கிற்கு மனித வேட்டையாடி விட்டது. இந்த வைரஸ்சின் அகோரப் பசிக்கு மாவீரன்  அலெக்ஸ்சாண்டரும் இரை. இந்த வைரஸ்களுக்கு உயிர் கொடுத்தது இயற்கையென்றால். .  சைனா உகான் நகர் வைராலஜி - இன்ஸ்டிடியுட் ஆய்வு கூடம் உமிழ்ந்து உயிர் கொடுத்தது ..வல்லரசு செயற்கை குரோனாவாகும்.

 

உன் பிரச்சினைகளை

உன்னால்தான்

சரி செய்ய முடியும்

ஏனென்றால்

அதை

உருவாக்கியவனே

நீதான்.. என்ற

ஓஷோவின் மெய்ஞான கூற்றுப்படி..  விஞ்ஞான குரோனோவின் வினையை  சைனா தான் அறுக்க வேண்டும்.

 

பிரான்ஸ் - நோபல் விஞ்ஞானி லூக்மாண் டாக்னியரும், தனது ஆள்காட்டி விரலை  ஆதராக் குவியலோடு சைனாவை நோக்கியே நீட்டுகிறார்.

 

இன்று - பூமிப் பந்து முழுமையிலும் கோரோனாவின் கைவசம் - முகக் கவசங்களோடு 25 லட்சம் பேரும், மரணத்திடம் மண்டியிட்டது 2 -லட்சமென்றும் உத்தேசக் கணக்கிருக்கிறது.

 

மத்தியரசும் - மாநில அரசும் இணைந்த கரங்களாக எடுத்த 1 மாதம் கடந்த ஊரடங்கால் ... கொர னோ தாக்கம் கட்டுக்குள் அடங்கியிருக்கிறது.

 

2-கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பணமும் தானியப் பொருட்களும்.. அம்மா உணவங்கள் கர்ணனும் செய்ய மறந்த அன்ன தர்மங்களையும் செய்து, தமிழகரசு பொது ஜனங்களை  தாய்ப்பறவையின் சிறகுகளாய் பாதுகாக்கிறது.

 

பேஸ்புக்குகளில், லைக் போடவும், லைஃப் வேண்டும்.

 

ரத்தன் டாடா 1500 கோடிகளும், அம்பானி - அதானி - 500 - கோடிகளும் தந்து, தேச ஆரோக்கியத்திற்கு சேமிப்பையும் தந்திருக்கிறார்கள்.

 

பல - தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்தவர்களெல்லாம் ... கரைந்து விடுமென்று, புதையலை காக்கும் கருநாகமாகய் கிருமியை விட - கேவலமான கருமியாய்  நாக்கை தொங்கவிட்டபடி பூதம் காக்கிறார்கள்.

 

உறை பனிக்குள்ளும், இறை பணியாய் பாரத மாதாவை தெய்வமாய் பூஜிக்கும் ராணு வீரர்களும் தங்கள் சம்பளத்தை கொரோனா நிதியில் சேர்த்தது உலகிலேயே  இங்கு தான்.

 

இந்திய தேசத்தை பழித்து விட்டு, கம்யுனிச சைனாவை சும்மாடு வைத்து சுமக்கும் துரோக கூட்டங்கள் ... இப்போதெல்லாம் கேரளாவை பாரீர், மேற்கு வங்கத்தை பாரீர் என உளறலில் உறுகாய் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

 

வைப்பாட்டியை மதிக்க தெரிந்தவனுக்கு ... பொண்டாட்டி மிதியடி தானே..

 

மதுரை சேர்ந்த 65 வயது ஏழை மூதாட்டி, 28 - மாநிலங்களுக்கும், 3 - யுனியன் பிரதேசங்களுக்கும் தலா 100- ரூபாய் அனுப்பி  இராமர் பாலத்திற்கு அணில் செய்த உதவியாய் - தனது உதவும் குணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

தி.மு.க கூட்டணிக்கு , கோடிகளில் லஞ்சம் பெற்ற தமிழக கம்யுனிஸ்டுகள் .. அதை நன்கொடையென பொழிப்புரை தந்தார்கள்.. இன்று - இந்த தேசத்திற்கு அட்டைக் கத்தி அறிக்கைகளைத் தருகிறார்களே தவிர, உண்டியலை உடைக்க மறுக்கிறார்கள்.

 

கழிந்த வருடம் ,சைனா  - கைலாஷ் யாத்திரை சென்ற பக்தர்களின் சூட்கேஸ்களிலிருந்த இந்திய செய்திதாள் கைளையும் கிழித்தெறிந்து ,தங்கள் எல்லைக்குள் இந்திய காற்றையும்   தடுக்க  மூளைக்குள் முட்டுக் கொடுத்து யோசிக்கும், சுதந்திரத்தின் அர்த்தம் தெரியாத சீனாவுக்காக .. சீனா -தானா பாடும் நம்ம ஊரு கானா _ மூனா காம்ரேடுகளை என்ன வென்று சொல்ல..

 

தமிழகத்தில் மக்கள் தொகை  ஏழரை கோடி .. 38 - மாவட்டங்கள் ., கேரளத்தில் மூன்றரை கோடி .. 14 மாவட்டங்கள்.. நாம் குடமென்றால் - கேரளா வாழிதான் .,

 

உலகின் எந்த மூலையிலும் - ஒருவர் ஓலைக் குடிசையில் 11 - வருடங்களிருந்தாலே, அவருக்கு தன்னிச்சையாக குடியுரிமை - உரிமை யோடு வந்து சேரும்.

 

கேரளத்து இடுக்கி மாவட்டம் - உட்பட நூறு வருடங்களுக்கு மேலேயும் அம் மாநிலத்து காட்டை - திருத்தி நாடாக்கிய தமிழர்களுக்கு இன்று வரையிலும் அகதி நிலைமை

 

தமிழகத்தில் - மலையாளிகளை சகோதரர்களாக பார்ப்பதால் தான், அவர்கள் சொத்துக்களை இங்கே நம்பிக்கையோடு வாங்கி குவிக்கிறார்கள்.

 

மூதாதையர் காலத்திலிருந்தே  மலையாள அரசுகள் தமிழர்களை   புளோட்டிங் பீப்பிள் என்ற அடையாளத்தோடு .. வேர்கள் இல்லாமலேயே உரிமைகளை செயலிழக்கச் செய்து உலர்த்தி வைத்திருக்கிறது.

 

கம்யுனிஸ்டுகளுக்கு கேரள முதல்வரோடு கள்ள காதலிருப்பதால் ... தமிழர்கள் வெறும் பாண்டி நாட்டு  ஜனங்கள்தான் , சக - தோழர்களல்ல .,

தமிழ் நாட்டில் கொரனோ தொற்று 1755 பேர்கள்., தொற்றை தோற்கடித்து இல்லம் திரும்பியவர்கள் 866 பேர்கள் .. கேரளாவில்  தொற்று 450 பேர்கள் .. விடுபட்டு இல்லம் திரும்பியவர்கள் 3 11-பேர்கள்.. மக்கள் தொகை சதவீத கணக்கில் தமிழகத்தில் தான் குறைவு .

 

170 - வருடங்களுக்கு முன்பிருந்தே, நாஞ்சில் நாட்டில் ஒரு சொலவடையுண்டு .. உன்னை கொரனோ தீனம் தாக்க.. தீனம் என்றால் கொள்ளை நோய்.. பால்காரர் பாலை மைனாரிட்டி ஆக்கி - தண்ணீரை மெஜாரிட்டியாக்கிய போதும், மளிகை கடைக்காரர் கலப்படங்களோடு அசுரர்களாகும் போது _ எளியவர்கள் - இவர்கள் மீது கோபமாக _ சாப பிடும் பிரம்மாஸ்திரமே.. உன்னை கொரனோ தீனம் தாக்க.. இந்த வைரஸ்சும் பழைய வளையிலிருந்து வெளிப்பட்ட புதிய  பெருச்சாளிதான்.

 

 இந்த _ கொள்ளை நோய் காலத்திலும் .. அரசுக்கு உதவாமல் கட்சிக்காக காசு வாங்கிட்டு கூவுகிறவர் களை பார்க்கும் போதும், பொது மக்களுக்கும் வெறித்தனமாக திட்டணும்போல் தானிருக்கு'.

 

முகமூடிகளே.. முகங்களானால் . . நிழலுக்கும் குடை பிடிக்க தான் சொல்லுவார்கள்.

 

மிளகுக்கு ஓடும் நோயும் .. வேம்புக்கு இறங்கும் பேயும் .. மஞ்சளுக்கு மயங்கும் கிருமியும்.. உப்புல மரிக்கும் கிருமியும் சித்த மரபை - சிந்தையில் வாங்கி, நம் முன்னோர்கள் தந்த முதலுதவிகளை நாம் அஞ்சறை பெட்டியிலேயே அஞ்சலி செலுத்தி விட்டோம்

 

கொரோனாவை எல்லோரும் பேரழிவாகப் பார்க்கிறார்கள்'. நான் அதை ஒரு பெரிய திருத்துனராக பார்க்கிறேன்.. நாம் மறந்து விட்ட முக்கியமான பாடங்களை ஞாபகப்படுத்த அனுப்பப்பட்டுள்ள ஆசானே .. பில்கேட்ஸ் சின் கூற்றுப்படி, நாம் - இனியாவது பழைய பனை ஓலைகளிலிருக்கும் உணவே மருந்தான பழைய - பரம்பரை பழக்க வழக்கங்களுக்கு திரும்பியாக வேண்டும்.

 

முட்டை யிடுவதற்கு முன்பே .. காகம் கூடு கூட்டுகிறது.. நாம் - தாகமெடுப்பதற்கு முன்பே - கிணறு தோண்டுவோம்.

 

 

பூமியின் வேண்டாத யினமாக மனிதர்கள் மாறக் கூடாது .. புழு நெளியவும் .. அணில் தாவவும்.. வெளவால் தொங்கவும் .. மீன் நீந்தவும் இயற்கையோடு - இயல்பாக உரிமையுண்டு.

 

இமைகளை - இமைக்க மறந்து பாருங்கள்.. அதோ  புகை திரை விலகியது ... இமயமலை தெரிகிறது.

 

இனி - கண்களில்  நீர் வழிய வேண்டாம் ., மேகங்களில் நீர் கோர்க்கட்டும்

 

ஆயிரம் ஜன்னல்கள் கொண்ட காரைக்குடி இல்லங்களாய் இன்னல்கள் துறந்து ., பாயிரம் பாடி ஆலயங்களை திறந்து  ஆனந்தமடைவோம்.

 

நாற்றும் இடைவெளி விட்டு அசையும் போது .. உயிர் காற்றையும்  தனித்திருந்தே சுவாசித்து , கொரனோவின் பேச்சை வழக்கொழிந்து போக செய்வோம்.