Aug 02, 2018 08:34 PM

இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்தப் படத்தின் தகவல் வெளியானது!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்தப் படத்தின் தகவல் வெளியானது!

‘அட்ட கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித், ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர், ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ‘கபாலி’ மற்றும் ‘காலா’ படங்களின் மூலம் இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.

 

தற்போது பா.ரஞ்சித்தின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும், அதில் ஹீரோவாக நடிப்பது யாராக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டும் இன்றி, திரையுலகினரிடமும் அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில், பா.ரஞ்சித் தனது அடுத்தப் படமாக இந்திப் படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும், அப்படம் வரலாற்று பின்னணி கோண்ட பிரம்மாண்டமான படமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

பாலிவுட்டில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான நமா பிக்சர்ஸ், ரஞ்சித் இயக்கத்தில் படம் தயாரிக்க விரும்பியுள்ளது. இதையடுத்து நமா பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் இயக்க சம்மதம் தெரிவித்திருக்கும் ரஞ்சித், வரலாற்றுப் பின்னணி கொண்ட படத்தை இயக்க முடிவு செய்துள்ளதோடு, இந்த படத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளாராம்.