Oct 10, 2019 04:39 AM

”உரக்கச் சொல்லுவோம்...” - ‘அசுரன்’ படம் பற்றி இயக்குநர் பா.ரஞ்சித்

”உரக்கச் சொல்லுவோம்...” - ‘அசுரன்’ படம் பற்றி இயக்குநர் பா.ரஞ்சித்

வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘அசுரன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. நடிப்பில் தான் ஒரு திமிங்கலம் என்பதை நிரூபித்திருக்கும் தனுஷ், இப்படத்தில் நடித்திருக்கும் இரண்டு வேடங்களுமே அசுரத்தனமாக மிரட்டியிருக்கிறது.

 

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், படம் என்னவோ ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், தனது படங்களில் தலிம் மக்களின் குரலை வெளிப்படையாக ஒலிக்கச் செய்து விமர்சனத்துக்கு ஆளாகும் இயக்குநர் பா, ‘அசுரன்’ படத்தை பற்றி பாராட்டியதோடு, அசுரன் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்டை உரக்கச் சொல்வோம், என்றும் கூறியிருக்கிறார்.

 

இது குறித்து பா தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்த்திரையில் அசுரன்கள் கதையை நிகழ்த்திக் காட்டிய இயக்குநர் வெற்றிமாறன், தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டியிருக்கும் தனுஷ், நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி தாணு மற்றும் இத்திரைப்படக் குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!. உரக்கச் சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!” என்று பதிவிட்டுள்ளார்.