May 10, 2019 07:07 PM
ரஞ்சித்தின் அடுத்தப் பட ஹீரோ இவர் தான்! - ‘மெர்சல்’ லான அப்டேட் இதோ

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும் பா.ரஞ்சித், பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்படம் முடிந்ததும் தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ள ரஞ்சித் அதற்கான கதையையும் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ வெற்றியை தொடர்ந்து ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தை தயாரிக்கும் ரஞ்சித், மேலும் ஒரு படத்தை தயாரிக்கிறார். இதில் கலையரசன் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த நிலையில், கலையரசன் ஹீரோவாக நடிக்கும் படத்துடன் மற்றொரு படத்தையும் பா.ரஞ்சித் தயாரிப்பதாகவும், அதில் ஹீரோவாக விஜயின் ‘மெர்சல்’ படத்தில் வில்லனாக கலக்கிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.