இயக்குநரை பிரமிக்க வைத்த பிந்து மாதவியின் காதல்!

’புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் ரஞ்சித் ஜெயக்கொடி, மூன்றாவதாக த்ரில்லர் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். Third Eye Entertainment நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கபடவில்லை.
பிந்து மாதவி, தர்ஷனா பானி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இரண்டு சகோதரிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பதற்காக தங்களது சொந்த ஊருக்கு செல்லும் போது சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அப்பிரச்சினைகளை அவர்கள் உளவியல் ரீதியாக எதிர்கொள்வதை த்ரில்லராக சொல்லியிருப்பது தான் இப்படத்தின் கதை.
முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கபப்ட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற ஊட்டியில் கடுமையான குளிர் நிலவியதாம். அதை கூட பொருட்படுத்தாம ஒட்டு மொத்த படக்குழுவும் இடைவிடாமல் படப்பிடிபு நடத்தி முழு படத்தையும் 30 நாட்களில் முடித்திருக்கிறார்கள்.
இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறுகையில், “படக்குழு அனைவரின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமனாது. ஒவ்வொருவரும் தங்களது முழு ஒத்துழைப்பையும் உழைப்பையும் தந்துள்ளார்கள். ஊட்டியில் மிகவும் பனிசூழ்ந்த சிரமமான சுற்றுப்புற சூழலில் மிகுந்த கஷ்டத்திற்கு இடையே 30 நாட்கள் தொடர்ந்து படம்பிடித்தோம். கடும் பனிப்பொழிவில் நடிகர்கள் பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் இப்படப்பிடிப்பை முழுதாக முடித்து விட முடியுமா, என நான் சந்தேக மிகுதியில் இருந்தேன். ஆனால் அவர்களது அர்பணிப்பும் படத்தின் மீது அவர்களது காதலும் பிரமிக்கும்படி இருந்தது. சிறுமுகச்சுழிப்பு கூட இல்லாமல் இருவரும் மிகக்கடுமையாக உழைத்தார்கள்.
ஒளிப்பதிவாளர் கவின் ராஜ் மிக முக்கியமாக குறிப்பிடபட வேண்டியவர். அவரும் அவரது குழுவும் இல்லையெனில் இப்படப்பிடிப்பு சாத்தியமாகியிருக்காது. எங்களுக்கு பல்வேறு தடங்கல்கள் நேர்ந்தது. ஊட்டி மாதிரியான இடத்தில் திடீரெனெ சூரிய ஒளி பிரச்சனைகள் ஏற்படும். இம்மாதிரி பல்வேறு பிரச்சனைகளில் தயாரிப்பு குழுவின் ஆதரவு அற்புதமாக இருந்தது. அனைவரது அர்பணிப்பான உழைப்பால் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிக்கப்பட்டது.” என்றார்.
படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் தலைப்பை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.