Jun 30, 2019 04:53 AM

வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர் விஜய்!

வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர் விஜய்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் இயக்கி வரும் இயக்குநர்களில் விஜய் முக்கியமானவர். அஜித்தின் கிரீடம் படத்தில் அறிமுகமான இவர், விஜய், விக்ரம், ஆர்யா, பிரபு தேவா என பல ஹீரோக்களை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

 

இந்த நிலையில், இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணத்திற்கு தயராகிவிட்டார் என்றும், அவர் மணக்கப் போகும் பெண் மருத்துவர் என்றும் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

தற்போது, இயக்குநர் விஜய் தான் மணக்கப் போகும் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா என்ற எம்.பி.பி.எஸ் மருத்துவரான இவர், பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

 

விஜய் - ஐஸ்வர்யா திருமணம் வரும் ஜூலை மாதம் சென்னையில் நடைபெற உள்ளது.

 

இவர் தான் ஐஸ்வர்யா,

 

Aishwarya