Jul 02, 2019 11:00 AM

ஆம்லெட் போட நினைத்த இயக்குநர்! - மறுப்பு தெரிவித்த நடிகைக்கு நேர்ந்த சோகம்

ஆம்லெட் போட நினைத்த இயக்குநர்! - மறுப்பு தெரிவித்த நடிகைக்கு நேர்ந்த சோகம்

சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகள் பலர் படுக்கைக்கு அழைக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. சில முன்னணி நடிகைகள் வெளிப்படையாக இந்த விஷயம் குறித்து பேசினாலும், தங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் வந்ததில்லை, என்று மழுப்பவும் செய்கிறார்கள். ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களுக்கு நேர்ந்த சோகத்தை வெளிப்படையாக சொல்கிறார்கள்.

 

அந்த வகையில், பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான மல்லிகா ஷெராவத், சினிமாவின் தனக்கு நேர்ந்த சோகமான சம்பவத்தையும், அதற்கான காரணங்களையும் பேட்டிகள் மூலம் வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளார்.

 

தமிழில் கமலின் ‘தசவதாரம்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தவர், சிம்புவின் ‘ஒஸ்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். மேலும், ஜாக்கிசானுடன் ‘தி மித்’ படத்தில் நடித்தவர், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

 

ஆனால், திடீரென்று பாலிவுட்டில் இருந்து மாயமானவர், கடந்த மூன்று வருடங்களாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

 

இந்த நிலையில், மூன்று ஆண்டுகளாக தனக்கு பட வாய்ப்புகள் வராததற்கு காரணம், அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒத்துப்போகாமல், தொடர்ந்து பெண் உரிமைக்காக பேசி வந்ததால் தான், தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்று மல்லிகா ஷெராவத் கூறியிருக்கிறார்.

 

Mallika Sherawath

 

சினிமா முழுவதுமே ஆண்களின் கையில் இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் மல்லிகா ஷெராவத், சினிமாவில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால், மூன்று ஆண்டுகளில் சுமார் 30 படங்களின் வாய்ப்புகளை இழந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

மேலும், இயக்குநர் ஒருவர் தனது தொப்புளில் ஆம்லெட் போட விரும்பி, அதனை நடன இயக்குநரிடம் தெரிவித்தாராம். அவரும் மல்லிகா ஷெரவத்திடம் இயக்குநரின் விருப்பத்தை கூற, அதற்கு மல்லிகா முடியவே முடியாது, என்று மறுத்திருக்கிறார். உடனே அந்த படத்தில் இருந்து மல்லிகா ஷெராவத் நிக்கப்பட்டுள்ளார்.

 

ஹீரோக்கள் தங்களுக்கு அனைத்து வகையிலும் அட்ஜெஸ்ட் செய்யும் அவர்களது தோழிகளுக்கு மட்டுமே வாய்பு கொடுத்து வருவதால், தனக்கு பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. அதனால் தற்போது வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கிவிட்டேன், என்றும் மல்லிகா ஷெராவத் தெரிவித்திருக்கிறார்.