Jun 10, 2020 06:00 AM

கொரோனாவால் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மரணம்! - பிறந்தநாளில் நிகழ்ந்த இறப்பு

கொரோனாவால் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மரணம்! - பிறந்தநாளில் நிகழ்ந்த இறப்பு

கொரோனா வைரஸின் தாக்கம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மூச்சு திணறல் காரணமாக கடந்த 2 ஆம் தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ அன்பழகனுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

 

இதையடுத்து, அவரை தீவிர சிகிசை பிரிவில் அனுமதித்து, மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

 

இந்த நிலையில், எம்.எல்.ஏ அன்பழகன் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். மேலும், தொற்றுநோய் விதிகளின் படி ஜெ.அன்பழகன் உடல் சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

இறந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், சினிமா துறையிலும் ஈடுபட்டிருந்தார். சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்த ‘யாருடா மகேஷ்’ என்ற படத்தை விநியோகம் செய்தவர், அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்த ‘ஆதிபகவன்’ படத்தை தயாரித்தார்.

 

உயிரிழந்த எம்.எல்.ஏ அன்பழகனுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.