Aug 25, 2019 08:53 AM

போதைக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வரும் ‘கோலா’

போதைக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வரும் ‘கோலா’

அறிமுக இயக்குநர் மோத்தி.பா இயக்கத்தில், விக்கி ஆதித்யா, சைவாக் ஆகியோர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘கோலா’. இதில் ஹரியின் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் மோத்தி முகமது, தருண் மாஸ்டர், பாபூஸ், சந்தான லக்‌ஷ்மி, ஜீவா ரவி, ஜெய சுவாமிநாதன், கிருஷ்ணன், குமார், ஜெய்கணேஷ், அமுதவாணன், ஜுங்கா பாலா, ஸ்ரீகோ உதயா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

மோத்தி ஆர்ட்ஸ் சார்பில் மோத்தி முகமது தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கமில் ஜே.அலெக்ஸ் ஓளிப்பதிவு செய்ய, கண்மணி ராஜா இசையமைத்திருக்கிறார். எஸ்.எம்.பிரஷாந்த் பின்னணி இசையமைத்திருக்கிறார். காதல் மதி, டாக்டர் கிருதியா, மோத்தி.பா ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ராம்ஜி கலையை நிர்மாணிக்க, ராதிகா நடனம் அமைத்திருக்கிறார். தீபக் எடிட்டிங் செய்திருக்கிறார்.

 

படம் குறித்து இயக்குநர் மோத்தி.பா கூறுகையில், “போதை இந்த ரெண்டெழுத்து சொல்தான் வெகுகலாமாக இந்த உலகை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. அதில் பல வகை உண்டு பணக்கார போதை, அதிகார போதை, பெண் போதை, மது போதை, கடைசியாக புகழ் போதை. மனிதன் தன் கடைசி மூச்சு நிற்கும் வரை புகழ் போதைக்கு ஆசைப்படுகிறான். அதை அனுபவிக்கவும் செய்கிறான். உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஏதாவது ஒரு போதையின் அடிமைகள்தான். விளக்கின் வெளிச்சத்தை தேடிச்சென்று விழும் விட்டில் பூச்சிகள் போல் சிலர் போதையில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் போதை என்பதே ஒரு மாயை தான். ஒரு வித தற்காலிகமான அமைதியை, இன்னும் சொல்லப்போனால் நம்மை அழமாகவோ, ஒரு முகமாகவோ சிந்தித்து முடிவெடுக்க விடாமல் செய்வதுதான் போதையின் முக்கியமான வேலை. இதை எத்தனையோ ஞானிகளும், மகான்களும் பல விதங்களில் எடுத்துச் சொல்லியும் கேட்பாரில்லை இருந்தாலும் ஒரு சிலரின் காதில் விழுந்து கருத்தில் நின்றால் அவர்களாவது போதையின் கொடூர பிடியிலிருந்து விடுபட்டு விட மாட்டார்களா என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கிய படம் தான் இந்த ‘கோலா’ பாடகர்கள் கானா பாலா, அந்தோணி தாஸன், மகாலிங்கம் மூவரும் ஒரு பாடலுக்கு பாடி நடனமாடி இருகிறார்கள் அந்த மூன்று பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெரும்.” என்றார்.