’என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி!

கெளதமன் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் சில பிரச்சினைகளால் முடிய மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.
இதற்கிடையே, படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தாலும், படம் ரிலீஸ் ஆவதில் இருந்த சிக்கல் நீடித்துக்கொண்டே வந்தது. இதனால், ஒரு கட்டத்தில் தனுஷ் இப்படத்தின் மீது இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் தொடர்பாக இருந்த அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாம். இதனால், இந்த முறை இப்படக்குழு வைக்கும் ரிலீஸ் தேதி குறி தப்ப வாய்ப்பே இல்லையாம். எனவே, படத்தை வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.