May 06, 2019 08:21 AM

போதை மருந்துடன் பிரபல நடிகர் கைது! - படப்பிடிப்பில் பரபரப்பு

போதை மருந்துடன் பிரபல நடிகர் கைது! - படப்பிடிப்பில் பரபரப்பு

இந்தியாவில் போதை பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் சினிமாத் துறையினரும் போதை பொருளை அதிகமாக பயன்படுத்துவதகாவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில்,  பிரபல மலையாள நடிகர் மிதுன் என்பவர் படப்பிடிப்பு தளத்தில் கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டிருந்த போது, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

 

‘ஜமீலாண்டே பூவன்கோழி’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது தான் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. மிதுனுடன் அப்படத்தின் ஒளிப்பதிவாளரும் கைது செய்யப்பட்டார்.

 

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஒருவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Actror Mithun Arrest