May 17, 2019 06:28 PM

பழம்பெரும் நடிகர் மரணம்! - சோகத்தில் திரையுலகம்

பழம்பெரும் நடிகர் மரணம்! - சோகத்தில் திரையுலகம்

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கும் பழம்பெரும் நடிகர் ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ், இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

 

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ், சிறந்த நடிகருக்கான ஆந்திர மாநில அரசு விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

 

உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 

 

அவரது மறைவுக்கு சினிமா துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.