Jun 10, 2019 07:30 AM

பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம்!

பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம்!

பிரபல திரைப்பட மற்றும் மேடை நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.

 

’காதலன்’, ‘மின்சார கனவு’, ‘ரட்சகன்’, ‘24’, ‘செல்லமே’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் கிரிஷ் கர்னாட், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 

நாற்பது ஆண்டுகளாக மேடை நாடகங்களை இயக்கி நடித்து வந்த கிரிஷ் கர்னாட், இந்தியாவில் இலக்கியம் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீட விருது பெற்றிருக்கிறார். இத்துடன் பல விருதுகளை பெற்றிருக்கும் கிரிஷ் கர்நாட் நடிகராகவும், இயக்குநர் மற்றும் எழுத்தாளராகவும் பல சிறந்த படைப்புகளை கொடுத்திருக்கும் அவருக்கு இந்திய அரசாங்கத்தின் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் காலமானார்.