Jan 26, 2019 07:20 AM
பிரபல நடிகருக்கு நான்காவது மனைவியான சின்னத்திரை நடிகை!

சினிமா நட்சத்திரங்கள் எது செய்தாலும் அது பெரிய அளவில் செய்தியாகிவிடுகிறது. அதிலும், அவர்களது திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம், அந்த செய்திக்காகவும், புகைப்படத்திற்காகவும் ரசிகர்கள் ஆர்வமுடன் கார்த்திருக்கிறார்கள்.
அந்த வகையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரபல சின்னத்திரை ஜோடிகளின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
மலையாள தொலைக்காட்சியில் சீதா என்ற தொடரில் நடிப்பவர்கள் ஆதித்யன் - அம்பிலி தேவி. இவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இவர்கள் கொல்லத்தில் உள்ள கொட்டி தேவி கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆதித்யனுக்கு அம்பிலி நான்காவது மனைவியாம், அதேபோல், அம்பிலிக்கு ஆதித்யன் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.