பிரபல நடிகரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு! - அதிர்ச்சியில் திரையுலகம்

சீனாவின் வுகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் பல நாடுகளில் பரவி வருவதோடு ஏராளமான உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவியிருந்தாலும், இதுவரை உயிர் சேதம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் தாமஸ் ஹங்ஸ் என்பவரின் மனைவி ரிதா வில்சன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். நடிகர் தாமஸ் ஹங்ஸ், தனது மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதை, தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சீனா நாட்டை தொடர்ந்து கொரோனா வைரஸால் அதிகமான உயிர் பலி ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், அமெரிக்காவிலும் சுமார் 800 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதோடு, சுமார் 109 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பிரபல நடிகர் ஒருவரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது திரையுலகினரை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.