Jan 31, 2020 04:17 AM

அஜித், ஷாலினி திருமணத்தால் அப்செட்டான பிரபல நடிகர்! - நடிகை வெளியிட்ட சீக்ரெட்

அஜித், ஷாலினி திருமணத்தால் அப்செட்டான பிரபல நடிகர்! - நடிகை வெளியிட்ட சீக்ரெட்

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் அஜித், தனது படங்கள் பற்றி எந்த இடத்திலும் பேசுவதில்லை. அதேபோல், எந்த நிகழ்வுகளிலும் கலந்துக் கொள்ளாதவர், ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும், அவர் குறித்து அவ்வபோது சில சர்ச்சையான தகவல்கள் பரவி வருகிறது.

 

அந்த வகையில் ஷாலினி திருமணம் பற்றிய தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி அஜித்தை திருமணம் செய்துக் கொண்டதால் பிரபல நடிகர் ஒருவர் அப்செட்டாகி, கோபப்பட்டார், என்பதை பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி, ஹீரோயினாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். குறிப்பாக விஜயுடன் அவர் நடித்த ‘காதலுக்கு மரியாதை’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்திற்குப் பிறகு அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர், அதன் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவிட்டு, அஜித்தை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.

 

இந்த நிலையில், ஷாலினி திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டதை அறிந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், வருத்தப்பட்டாராம்.

 

Actor Amitabh Bachan

 

“நல்ல நடிகை. அஜித் கல்யாணம் பண்ணிட்டாரே. இனிமே நடிக்கவே மாட்டாங்களே” என்று கூறி அமிதாப் பச்சன் கோபப்பட்டாராம்.

 

இந்த தகவலை நடிகை சுஹாசினி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

Suhasini