May 13, 2019 07:31 AM

என் சினிமா வாழ்க்கை சீரழிய சத்யராஜ் காரணமா? - பிரபல நடிகை கேள்வி

என் சினிமா வாழ்க்கை சீரழிய சத்யராஜ் காரணமா? - பிரபல நடிகை கேள்வி

90 களில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் விசித்ரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று முன்னணி ஹீரோக்கள் பலரது படங்களில் நடித்து வந்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். தற்போது ஹோட்டல் தொழில் நடத்தும் விசித்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

 

இந்த நிலையில், விசித்ரா மீண்டும் நடிக்க போகிறாராம். இதற்காக அவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த போட்டோக்களை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறார். மேலும், சமூக வலைதளங்களிலும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

Actor Visithra

 

விசித்ராவின் புகைப்படம் ஒன்றுக்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், “தமிழில் முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது. சத்யராஜ் மாம்ஸால போய்டுச்சு” தெரிவிக்க, அதற்கு பதில் அளித்த விசித்ரா, ”எனது திறமையின் மீது சத்யராஜ் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இயக்குநராக அவதாரமெடுத்த அவர் தனது முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார். ஆனால் அந்த வேளையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒரேமாதிரியான படங்களின் போக்கு என்னை சில நல்ல பாத்திரங்களை ஏற்கவிடாமல் தடுத்துவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.