Mar 06, 2019 06:12 AM

ஈஷா மையத்தில் நடனம் ஆடிய பிரபல நடிகைகள்!

ஈஷா மையத்தில் நடனம் ஆடிய பிரபல நடிகைகள்!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா நேற்று ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்பட்டது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

நடிகர் ராணா, நடிகைகள் சிஹாசினி, சுகி சாவ்லா, தமன்னா, காஜல் அகர்வால், அதிதிராவ் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களும் இவ்விழாவில் கலந்துக் கொண்டார்கள்.

 

நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால், அதிதி மேனன் ஆகியோர் மாலை 4 மணியளவில் ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு செல்பி எடுத்துக் கொண்டனர். பிறகு இரவு நடைபெற்ற மகா சிவராத்திரி  விழாவின் போது சத்குரு நடனமாடிய போது, தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நடிகைகளும், அங்கிருந்தவர்களும் நடனம் ஆடினார்கள்.

 

Tamanna and Kajal Agarwal in Esha Yoga Centre