Mar 04, 2019 07:14 PM

44 வயதில் திருமணம்! - பிரபல நடிகையின் திடீர் முடிவு

44 வயதில் திருமணம்! - பிரபல நடிகையின் திடீர் முடிவு

நடிகர்கள் மார்க்கெட் குறைந்தால் அரசியலுக்கு போவதும், நடிகைகள் சீரியல் பக்கம் போவதும் வழக்கமான ஒன்றாக இருப்பது போல, நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு ஹீரோயின் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதற்காகவே பல நடிகைகள் சுமார் 35 வயதுக்கு பிறகு தான் திருமணம் பற்றியே யோசிக்க செய்கிறார்கள். ஆனால் சிலரோ 40 வயதை கடந்தும் திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கிறார்கள்.

 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்ததவர் நக்மா. தற்போது 44 வயதாகும் அவர், சினிமாவுக்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் அம்மா வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

 

இந்த நிலையில்,  44 வயதாகும் நக்மா, தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருப்பதோடு, நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன், என்றும் கூறியிருக்கிறார்.

 

Nakma

 

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய நக்மா, ”திருமணம் என் கையில் இல்லை, கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும். எனக்கான நேரம் வரும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.