Jan 10, 2020 02:55 AM

தொழிலதிபருக்கு மூன்றாவது மனைவியான பிரபல நடிகை!

தொழிலதிபருக்கு மூன்றாவது மனைவியான பிரபல நடிகை!

சினிமா நடிகர், நடிகைகள் மறுமணம் செய்துக் கொள்வதில் சகஜமான ஒன்று தான் என்றாலும், சிலர் வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்துக் கொள்வதை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல நடிகை ஒருவர் மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டதையும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

 

பிரபல மராத்தி சினிமா நடிகையான நேகா பெண்ட்ஸ் சமீபத்தில், ஷர்துல் பயாஸ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணம் குறித்து பாலிவுட்டில் பரபரப்பாக பேடப்பட்டது.

 

தொழிலதிபர் ஷர்துல் பயாஸ், ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றதோடு, அவருக்கு இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். 

 

இரண்டு திருமணமான தொழிலதிபரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டதற்காக நடிகை நேகா பெண்ட்ஸ் திருமணம் செய்துக் கொண்டதை ரசிகர்கள் விமர்சித்து வருவதோடு, பெரிய அளவில் வயசு வித்தியாசம் உள்ளவரை பணத்திற்காக தான் திருமணம் செய்துக் கொண்டார், என்றும் கமெண்ட் தெரிவித்து வந்தார்கள்.

 

Actress Neha Pendse

 

இந்த நிலையில், தனது திருமணம் குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியிருக்கும் நேகா, “அவர் விவாகரத்து ஆனவர் என்பதை தான் குறையாக பேசுகிறார்கள். நானும் வெர்ஜின் இல்லையே” என்று கோபமாக பேசியிருப்பதோடு, “வேலை உள்ளிட்ட சில விஷயங்களால் பலர் தாமதமாகத்தான் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அதனால், திருமணத்திற்கு முன்பே பலருக்கு இரண்டு மூன்று ரிலஷன்ஷிப் இருந்திருப்பது சாதாரணமாகிவிட்டது.” என்று விமர்சனம் செய்பவர்களுக்கு தடாலடி பதில் அளித்திருக்கிறார்.

 

Actress neha Pendse

 

நேகாவின் இந்த பதிலால், அவரது தைரியத்தை பலர் பாராட்டினாலும், அவர் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.