Jan 25, 2019 09:29 AM

கணவரின் இரண்டாவது மனைவிக்கு வாழ்த்து! - தமிழ் நடிகையின் பெருந்தன்மை

கணவரின் இரண்டாவது மனைவிக்கு வாழ்த்து! - தமிழ் நடிகையின் பெருந்தன்மை

சினிமாவில் நடிகர் நடிகைகள் விவாகரத்து என்பது எப்படி சாதாரணமான ஒன்றோ, அதுபோல அவர்களின் மருமணம் என்பதும் ரொம்ப சாதரணமான ஒன்று தான். அப்படி இருந்தாலும், விவாகரத்துக்கு பிறகோ, மறுமணத்திற்கு பிறகோ அவர்கள் நட்பாக பழகுவது கூட இல்லை, அவர் அவர் வழியில் செல்வது தான் வழக்கம்.

 

ஆனால், தமிழ் சினிமா நடிகை ஒருவர், தனது வழி தனி வழி என்பது போல, பெருந்தன்மையுடன், தனது கணவரின் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்ததற்காக வாழ்த்து கூறியதோடு, அவர்களை சந்தித்து அவர்களுடன் சில மணி நேரங்களையும் செலவிட்டுள்ளார்.

 

ஆம், தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி பிறகு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் காஜல் பசுபதி. இவர் நடன் இயக்குநர் சாண்டியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக சாண்டியை விவாகரத்தும் செய்துக்கொண்டார்.

 

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட காஜல், அதன் மூலம் பிரபலமடைந்த நிலையில், சாண்டியும் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

 

இந்த நிலையில், சாண்டியின் இரண்டாவது மனைவியை சமீபத்தில் நேரில் சந்தித்திருக்கும் காஜல், அவரது குழந்தையுடன் சில மணி நேரங்களை செலவிட்டுள்ளார். மேலும், சாண்டியும், அவரது மனைவியும் அவர்களது குழந்தையை பார்க்க தன்னை அழைத்ததாகவும் காஜல், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.