Sep 19, 2019 05:33 PM

44 வயதில் பாட்டியான பிரபல பாலிவுட் நடிகை!

44 வயதில் பாட்டியான பிரபல பாலிவுட் நடிகை!

சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்களில் பலர் 40 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால், பிரபல நடிகை ஒருவர் 44 வயதில் பாட்டியாகியிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரவீனா டாண்டன். கமல் நடித்த ‘ஆளவந்தான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு தற்போது 44 வயதாகிறது.  இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு அனில் தண்டரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

 

ரவீனா 21 வயதில் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க தொடங்கினார். மூத்த பெண்ணான சாயாவுக்கு 2016 ஆம் ஆண்டு திருமணமும் செய்து வைத்தார்.

 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சாயாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதன் மூலம் ரவீனா டாண்டன் பாட்டியாகியுள்ளார். இந்த தகவலை அறிந்த பாலிவுட் பிரபலங்கள், 44 வயதில் ரவீனா பாட்டியாகிவிட்டாரே என்று ஆதிர்ச்சியடைந்தாலும், ரவீனா பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்ததோடு, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தது மட்டும் இல்லாமல், அவர்கள் நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று பலவிதமான பூஜைகளையும் செய்து வந்தது, அவருக்கு பலரது பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.