May 06, 2019 08:05 AM

அஜித் ரசிகர்களுடன் கைகோர்த்த பிரபல இயக்குநர்!

அஜித் ரசிகர்களுடன் கைகோர்த்த பிரபல இயக்குநர்!

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, பாலிவுட் படத்தில் நடிக்க அஜித் ஓகே சொல்லியிருப்பதோடு, அதற்கு முன்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, சமீபத்தில் அஜித் பிறந்தநாளை படு அமர்க்களமாக கொண்டாடிய ரசிகர்கள், அஜித்திற்காக மேலும் ஒரு ஷ்பெஷலான விஷயத்தை செய்ய இருக்கிறார்கள். இதற்காக அவர்களுடன் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ஒருவரும் கைகோர்த்துள்ளார்.

 

ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்தாலும், அவரது ரசிகர்கள் என்னவோ மன்றம் மூலமாகவோ அல்லது அஜித் பெயரிலோ பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், மலேசியாவில் உள்ள அஜித் ரசிகர்கள் மன்றத்தின் டிபி-யை இயக்குநர் சீனு ராமசாமியை வைத்து வெளியிட உள்ளார்கள்.

 

Director Seenu Ramasamy

 

இன்று இரவு 7 மணியளவில் இந்த புதிய டிபி-யை இயக்குநர் சீனு ராமசாமி வெளியிடுகிறார். அவர் வெளியிட்டதும் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் அந்த டிபி-யை வைரலாக்க ரெடியாகி வருகிறார்கள்.