Mar 07, 2019 06:49 AM

மீ டூ விவகாரத்தில் சிக்கிய பிரபல இயக்குநர் தற்கொலை!

மீ டூ விவகாரத்தில் சிக்கிய பிரபல இயக்குநர் தற்கொலை!

நடிகை ஸ்ரீரெட்டி மூலம் தெலுங்கு சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மீ டூ விவகாரம், தமிழகத்திலும் தாண்டவமாடியது. ஸ்ரீரெட்டியை தொடர்ந்து பாடகி சின்மயி மீ டூ விவகாரத்தை கையில் எடுக்க, தமிழ் சினிமாவிலும் பெரும் சர்ச்சை வெடித்தது. 

 

 

சின்மயியை தொடர்ந்து பல நடிகைகள் மீ டூ விவகாரம் குறித்து பேச தொடங்கினாலும், தங்களுக்கு அதுபோன்ற அனுபவம் ஏற்படவில்லை, ஆனாலும் சினிமாவில் பாலியல் தொல்லை இருக்க தான் செய்கிறது, என்று கூறி வந்தார்கள். தற்போது மீ டூ விவகாரம் தொடர்பாக நடிகைகள் பேசுவது குறைந்துள்ளது.

 

இந்த நிலையில், மீ டூ விவகாரத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிக்கிய பிரபல இயக்குநரான ஆர்க்ய பாஸு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மீ டூ விவகாரத்தில் சிக்கிய இயக்குநர் ஆர்க்ய பாஸு, கடுமையான மன வருத்தத்தில் இருந்தாராம். குடும்பத்தின் உதவியோடு கவுன்சிலிங் எல்லாம் சென்ற அவர், சகஜ நிலைக்கு திரும்பியதோடு, சினிமாவில் படம் எடிட் செய்வது சின்ன சின்ன வேலைகளை செய்துவந்த நிலையில், மார்ச் 1ம் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

 

Director Argya Pashu

 

நன்றாக இருந்த இயக்குநர் ஆர்க்ய பாஸு தற்கொலை செய்தது அவரது குடும்பத்தையும், திரையுலகையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.