Jun 05, 2019 04:34 AM

சின்னத்திரைக்கு வரும் முன்னணி ஹீரோயின்! - பெரும் தொகை கொடுக்கும் ஜீ டிவி!

சின்னத்திரைக்கு வரும் முன்னணி ஹீரோயின்! - பெரும் தொகை கொடுக்கும் ஜீ டிவி!

சினிமாவுக்கு தொலைக்காட்சி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படுகின்றன. மேலும், இளைஞர்களை கவர வேண்டும் என்பதற்காக பிஸியாக இருக்கும் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகர்களை வைத்து புதிய நிகழ்ச்சிகளை தயாரிப்பதிலும் தொலைக்காட்சிகள் ஆர்வம் காட்டுவதோடு, நடிகர்களின் சம்பள விஷயத்திலும் தாராளம் காட்டுவதால் பல முன்னணி நடிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை விரும்புகிறார்கள்.

 

இந்தியாவிலேயே பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் படு பிரம்மாண்டமாக இருப்பதோடு, அதிகப்படியான மக்களிடமும் சென்றடைவதால், அமீர்கான், சல்மான்கான் போன்ற சூப்பர் ஸ்டார்கள் டிவி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துக் கொண்டு வருகிறார்கள்.

 

அந்த வரிசையில், பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினான கத்ரினா கைப், முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தியில் பிரபலமான ‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ நிகழ்ச்சியின் 7 வது சீசன் ஜீ இந்தி தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் நடுவராக கத்ரினா கைப் பங்கேற்க போகிறார். இதற்காக அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

 

Actress Katrina Kaif

 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முன்னணி நடிகைகள், இதுவரை வாங்காத மிகப்பெரிய சம்பளமாக கருதப்படுவதால், இந்திய தொலைக்காட்சிகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை கத்ரினா கைப் பெற்றுள்ளார்.

 

இது குறித்து கத்ரீனாவிடம் கேட்டதற்கு, சினிமாவை விட தொலைக்காட்சிகளில் அதிக உழைப்பை செலவிட வேண்டியுள்ளது. அதனால் தான் அதற்கு ஏற்ற சம்பளத்தை பெறுகிறோம். ஆண் நடுவர்களுக்கு கொடுக்கும் அதே சம்பளத்தை தான் நானும் பெருகிறேன், இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. இதற்கான எனது கொள்கைகள் சிலவற்றையும் தளர்த்த வேண்டியுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.