May 18, 2020 10:22 AM

பிரபல சீரியல் நடிகர் தற்கொலை! - மனைவி கண் முன் நடந்த சோகம்

பிரபல சீரியல் நடிகர் தற்கொலை! - மனைவி கண் முன் நடந்த சோகம்

கொரோனா பாதிப்பால் நாட்டில் பல தொழில்களும், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், துணை நடிகை மற்றும் நடிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வறுமையில் சாவதை விட கொரோனாவினால் செத்து போகிறோம், எங்களை வேலை செய்ய அனுமதியுங்கள் என்று தமிழ் சினிமாவை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கூறி வருகிறார்கள். 

 

இந்த நிலையில், கோரொனாவினால் ஏற்பட்ட வறுமை காரணமாக பிரபல சீரியல் நடிகர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

’ஆதத் சே மஜ்பூர்’ என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் மன்மித் கிரேவால். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், மும்பையில் தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

 

தனது கணவர் தற்கொலை செய்துக் கொண்டதை கண்ட அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, உதவிக்கு பக்கத்து குடியிருப்பில் இருப்பவர்களை அழைக்க, அவர்கள் கொரோனா இருக்கும் என்று நினைத்து வரவில்லையாம். பிறகு காவலாளி ஒருவர் வந்து, தூக்கு கயிறை அறுத்து மன்மித்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, அவர் இறந்துவிட்டார், என்று கூறினார்களாம்.

 

Manmeet Garwal

 

கொரோனாவுக்கு முன்பே சரியான படப்பிடிப்பு இல்லாமல் கஷ்ட்டப்பட்ட மன்மித் கிரேவால், கொரோனா பிரச்சினையால் கடன் வாங்கியதோடு, வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தவித்தாராம். அதனால், கவலையில் இருந்த அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.