குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு! - பிரபல சீரியல் நடிகை கைது

மக்களிடம் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகை, நடிகைகள் அவ்வபோது சர்ச்சைகளிலும் சிக்குகிறார்கள். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை குவாஹதி என்ற இடத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மருத்துவமனையில் சேர்த்த அசாம் போலீசார், பிறகு சம்பவத்திற்கு பின்னனி கூறித்து விசாரித்ததில், பிரபல சீரியல் நடிகையான ஜஹனபி சைகா, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்தது.
உடனே நடிகை மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து வட்டமான 35 புல்லட்கள் மற்றும் 40 கிலோ வெடி மருந்து, 9 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
நடிகை ஒருவர் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.