Apr 24, 2018 07:42 AM
பிரபல சீரியல் நடிகை தீ வைத்து தற்கொலை! - புகைப்படம் உள்ளே

சினிமா நடிகைகளுக்கு இணையாக, ஏன் அவர்களை விட ஒரு படி மேலேயே சீரியல் நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் மலையாள சீரியல் உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் கவிதா.
இவர் கடந்த 22 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 35 வயதான கவிதா தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.
தற்கொலை செய்துக்கொண்ட கவிதாவுக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார். அவரது கணவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.