பிரபல சீரியல் நடிகை தற்கொலை! - அதிர்ச்சியில் திரையுலகம்

சீரியல் நடிகைகள் மற்றும் நடிகர்கள் சர்ச்சைகளில் சிக்குவதும், தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு பிரபல நடிகை தற்கொலை செய்துக் கொண்டிருப்பது திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
’தில் டோ ஹாப்பி ஹய் ஜி’ (Dil Toh Happy Hai Ji) என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் சேஜல் ஷர்மா. இவர் நேற்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
நடனக் கலைஞரான இவர், தற்போது இந்தி சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததோடு, முன்னணி சீரியல் நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், அவர் தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். பிஸியான நடிகையாக இருந்த இவரது தற்கொலைக்கு காரணம், தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பிரச்சினை தான் என்றும், சீரியல் துறையில் இவருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை, என்றும் கூறப்படுகிறது.