May 03, 2019 07:36 AM

கணவரை பிரியும் பிரபல தொகுப்பாளினி

கணவரை பிரியும் பிரபல தொகுப்பாளினி

மலையாள சினிமாவில் பிரபல பாடகி மற்றும் தொகுப்பாளினியாக வலம் வரும் ரிமி டாமி, தனது கணவரை விவாகரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மலையாள சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியிருக்கும் ரிமி டாமி, பாடுவது மட்டும் இன்றி தொகுப்பாளினியாகவும் வலம் வருகிறார். இவர் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராய்ஸ் கிஷகூடம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் பாடுவதையும், தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வந்தார்.

 

இந்த நிலையில், ரிமி டாமி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து ரிமி டாமியோ அல்லது அவரது கணவரோ எந்த தகவலும் வெளியிடவில்லை.