May 16, 2019 09:49 AM

ரசிகர்களின் மோசமான கமெண்ட்! - ஆல்யா மானசாவின் அதிரடி நடவடிக்கை

ரசிகர்களின் மோசமான கமெண்ட்! - ஆல்யா மானசாவின் அதிரடி நடவடிக்கை

சின்னத்திரையில் பிரபலமாக உள்ள நடிகைகளில் ஆல்யா மானசா முக்கியமானவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சீரியலில் நடிப்பது மட்டும் இன்றி, டப்மேஷ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன் ஆப்கள் மூலமாகவும் இவர் மக்களை சென்றடைந்துக் கொண்டிருக்கிறார்.

 

அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் ஆல்யா மானசா, தனது காதல் விவகாரம் குறித்தும், காதலருடன் ஊர் சுற்றுவது குறித்தும் புகைப்படங்களை வெளியிடுவார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகளும், கமெண்டுகளும் வரும்.

 

இந்த நிலையில், சமீபத்தில் ஆல்யா மானசா போட்ட புகைப்படம் ஒன்றுக்கு ஒரு கமெண்ட் கூட வரவில்லை. இதனால், அவரை பின் தொடரும் ரசிகர்கள், என்னவென்று ஆராய்ந்ததில், கமெண்ட் போடும் ஆப்ஷனை ஆல்யா மானசா தூக்கிவிட்டாராம். காரணம், ரசிகர்கள் பலர் மோசமான கமெண்ட்களை தொடர்ந்து போடுவதால் அப்செட்டான ஆல்யா, அதில் இருந்து தப்பிப்பதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டாராம்.