Sep 24, 2019 04:38 AM

ரசிகர்கள் மீது நம்பிக்கை உள்ளது! - உருக்கமாக பேசிய ‘கயல்’ சந்திரன்

ரசிகர்கள் மீது நம்பிக்கை உள்ளது! - உருக்கமாக பேசிய ‘கயல்’ சந்திரன்

‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சந்திரன், தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அவர் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. 2 மூவி ஃபப் நிறுவனம் சார்பில் ரகுநாதன் பி.எஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுதர் இயக்கியிருக்கும் இப்படத்தில் பார்த்திபன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

 

ஹீரோயினாக சாட்னா டைட்டஸ் நடிக்க சாம்ஸ், டேனியல் ஆணி போப், அர்ஜெய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் எஸ்.டி.சி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

 

இதற்கிடையே சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசிய ஹீரோ கயல் சந்திரமெளலி, ”‘கயல்’ படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். அது எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம். 

 

எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடி தான் காட்டணும், எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து தான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டுமே காண்பிக்க வேண்டும். பல இன்னல்களை தாண்டி, பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். 

 

Thittam Poattu Thirudura Kootam Press Meet

 

திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை.

 

சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.