Sep 24, 2019 04:13 AM

இறுதிக்கட்ட திருப்பம்! - பிக் பாஸ் வீட்டில் இரண்டு புதிய போட்டியாளர்கள்

இறுதிக்கட்ட திருப்பம்! - பிக் பாஸ் வீட்டில் இரண்டு புதிய போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 3 இன்று 93 வது நாளில் அடியெடுத்து வைக்கிறது. இதன் மூலம் போட்டி முடிய சரியாக இன்னும் 7 நாட்களே உள்ளது. முகேன் இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கும் நிலையில், மற்ற இரண்டு பேர் யார்? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

 

தற்போது போட்டியாளர்களாக உள்ள ஷெரீன், தர்ஷன், கவின், லொஸ்லியா, சாண்டி, முகேன் ஆகியோரில் முகேனை தவிர மற்ற அனைவரும் எலிமினேஷன் பட்டியலில் இருப்பதால், இந்த ஒரு வாரமும் பிக் பாஸ் பரரப்பில் உச்சத்தில் இருக்கும்.

 

இந்த நிலையில், நிகழ்ச்சியை மேலும் பரபரப்புக்குள்ளாக்கும் விதமாக இன்று இரண்டு புதிய போட்டியாளர்களை பிக் பாஸ் களம் இறக்கியுள்ளார். ஆம், பிக் பாஸ் சீசன் 2 போட்டியின் வெற்றியாளரான நடிகை ரித்விகாவும், கோல்டன் டிக்கெட்டை வென்ற நடிகை ஜனனியும் இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரியாகியுள்ளனர்.

 

Janani Iyer and Rithvika

 

பிக் பாஸ் வீட்டில் சில நாட்கள் தங்கியிருக்கும் இவர்களின் தலைமையில் தான் சில டாஸ்க்குகள் நடக்கப் போவதாகவும், தற்போதைய பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியே ரசிகர்கள் என்ன பேசுகிறார்கள், என்பதை போட்டியாளர்களிடம் இவர்கள் சொல்வதோடு, ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் ரசிகர்களின் சார்பில் இவர்கள் விமர்சிக்க இருப்பதால், நிச்சயம் சில சண்டைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

எது எப்படியோ, இறுதி வாரத்தில் ரசிகர்களுக்கு பிக் பாஸ் சீசன் 3 செம எண்டர்டெயின்மெண்ட்டாக இருக்கும் என்பது உறுதி.