பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘மா வந்தே’ முதல் பார்வை!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடிக்கிறார். சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும், உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டும் உருவாகியிருக்கும் இப்படத்தில், அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி அவர்களுடனான ஆழமான பந்தத்தை வெளிக்காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச தரத்திலும், அற்புதமான VFX தொழில்நுட்பங்களுடனும், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறாக மட்டும் இன்றி, மக்களுக்கு ஊக்கமளிக்கும் மற்றும் மறக்க முடியாத திரை அனுபவத்தை வழங்கும் ஒரு படைப்பாக உருவாகி வருகிறது.
கிராந்தி குமார்.சி.எச் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வீர் ரெட்டி.எம் தயாரிக்கிறார். கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்ய, கிங் சாலமன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். நிர்வாக தயாரிப்பாளர்களாக கங்காதர்.என்.எஸ் மற்றும் வாணிஸ்ரீ.பி பணியாற்றுகிறார்கள். டி.வி.என்.ராஜேஷ் லைன் தயாரிப்பாளராகவும், நரசிம்ம ராவ்.எம் இணை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். தமிழ் பதிப்பின் மக்கள் தொடர்பாளராக குணா பணியாற்றுகிறார்.