Sep 12, 2019 06:27 PM

கவின் எடுத்த அதிர்ச்சி முடிவு! - சோகத்தில் பிக் பாஸ் வீடு

கவின் எடுத்த அதிர்ச்சி முடிவு! - சோகத்தில் பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருப்பவர்களின் குடும்பத்தார் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் விசிட் அடித்து வருவதால் பிக் பாஸ் போட்டி மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருக்கிறது. முகேன், தர்ஷன், வனிதா ஆகியோர் குடும்ப உறுப்பினர்களால் சந்தோஷமடைந்த நிலையில், லொஸ்லியாவின் குடும்ப உறுப்பினர்கள் எண்ட்ரியால் மட்டும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

 

அதிலும் கனடாவில் இருந்து வந்த லொஸ்லியாவின் தந்தை, லொஸ்லியா மீது நெருப்பை கக்கியது போல பேசியதோடு, “இப்படி செய்யரதற்கு பிச்சை எடுத்து பிழைச்சிக்கலாம்” என்று கூறிவிட்டார். அவர் கவின், லொஸ்லியா காதல் விவகாரத்தை தான் இப்படி பேசுகிறார் என்பது நமக்கு மட்டும் அல்ல கவினுக்கும் புரிந்தது. இதனால் மனமுடைந்த கவின் தேம்பி தேம்பி அழுத போது, அவரை சக போட்டியாளர்கள் தேற்றினார்கள்.

 

இந்த நிலையில், கவினை மேலும் ஒரு சம்பவம் சோகமடைய செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சாண்டியின் மனைவி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த போது கவினின் அம்மா போலீசாரால் கைது செய்யப்பட்டதை கவினிடம் கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே லொஸ்லியா விவகாரத்தில் சோகமடைந்த கவின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முடிவு எடுத்திருந்த நிலையில், அவரது அம்மாவுக்கு நேர்ந்த விஷயத்தை அறிந்ததும், இனி ஒரு நாள் கூட தன்னால் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது, என்று கூறி வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம்.

 

முதல் சீசனில் ஓவியா எப்படி வெளியேறினாரோ அதுபோல் கவின் தற்போது வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.