பிக் பாஸ் வீட்டில் பெண்களின் அவல நிலை! - ஆதங்கப்பட்ட மதுமிதா

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் 50 நாட்களை கடந்திருக்கும் நிலையில், போட்டியில் பல டிவிஸ்ட்டுகளும், சர்ச்சையான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. நேற்று அபிராமிக்கும், முகேனுக்கும் நடந்த சண்டை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய செய்தது. விட்டால், கொலை முயற்சி கூட பிக் பாஸ் வீட்டில் நடக்கும் போலிருக்கிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களை அடிமைப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மதுமிதா, ஆதங்கத்தோடு ஆண் போட்டியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
அப்போது, ”வனிதா மேடம் வந்ததும், 10 நிமிடம் கதவை திறந்து வைப்பேன், என்று கூறினார். அதை இப்போது செய்தால், வெளியே போகும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன், அந்த அளவுக்கு இந்த வீட்டில் மோசமான சம்பவங்கள் நடக்கிறது” என்று கூறும் மதுமிதா, “ஆண்கள் பெண்களை ரொம்பவே அடிமைப்படுத்துகிறீர்கள்” என்று கூற, அதற்கு கவின், ”அடிமைப்படுத்துவது பெரிய வார்த்தை” என்று பதில் அளிக்கிறார்.
அதற்கு மதுமிதா, “சரி பயன்படுத்திக் கொள்கிறீர்கள், போதுமா, இந்த வீட்டில் ஆண்கள் பெண்களை உங்களது தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறீர்கள்” என்று கோபமாக கூறுகிறார்.
இன்றைய எப்பிசோட்டில் ஒளிபரப்பாகும் இந்த காட்சியின் புரோமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முழு எப்பிசோட்டிலும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
#Day52 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/FP48ZmEk1s
— Vijay Television (@vijaytelevision) August 14, 2019