Jul 09, 2018 05:53 PM

ஹன்சிகா படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்!

ஹன்சிகா படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்!

நயந்தாரா, திரிஷா வரிசையில் தற்போது ஹன்சிகாவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத நாயகியை மையப்படுத்திய இப்படத்தை அறிமுக இயக்குநர் யூ.ஆர்.ஜமீல் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

 

பல பெரிய படங்களுக்கு இசையமைக்கும் ஜிப்ரான், தனது படத்திற்கு இசையமைப்பது குறித்து கூறிய இயக்குநர் ஜமீல், “ஜிப்ரான் சார் ஏற்கனவே மிகப்பெரிய படங்களில் இசையமைப்பாளராக இருப்பதால், என் படத்துக்கு இசையமைப்பாரா? என்று சந்தேகித்தேன். பாடல்களை விட, படத்தின் பின்னணி இசை ஸ்கிரிப்டுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளார். என் கதை அவருக்கு பிடித்து போனது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் பணிபுரியும் சிறந்த அனுபவத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

 

ஜியோஸ்டார் எண்டர்பிரைஸ் சார்பில் எம்.கோடீஸ்வர ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய் ராஜேந்திர வர்மா, நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார். இவர்கள் தற்போது சில முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.