Mar 05, 2019 01:23 PM

பிரபாஸால் பரவசமடைந்த ரசிகை! - வீடியோவால் பரபரப்பு

பிரபாஸால் பரவசமடைந்த ரசிகை! - வீடியோவால் பரபரப்பு

மாபெரும் வெற்றிப் பெற்ற ‘பாகுபலி’ படத்தால் இந்திய சினிமாவின் சூப்பர் ஹீரோவாக உயர்ந்திருக்கும் பிரபாஸுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் எங்கு சென்றாலும் அவரை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் ரசிகர்கள் அவரை சுற்றி வலைத்துவிடுகிறார்கள்.

 

தற்போது ‘சாஹோ’ பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் பிரபாஸ், சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை பார்த்த ரசிகை ஒருவர் சந்தோஷத்தில் துள்ளி குதித்ததோடு, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

இத்தோடு விடாமல், அவரது கண்ணத்தை செல்லமாக தொட்டுப் பார்த்த அந்த ரசிகை, ஏதோ பரவச நிலையை அடைந்தது போல துள்ளிக் குதித்து ஓடியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

 

இதோ அந்த வீடியோ,