நயன்தாராவுடன் இணைந்த ஆபாசப் பட நடிகை!

ஹீரோயின் சப்ஜக்ட் மற்றும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்று அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் நயன்தாரா, தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். நயன்தாரா முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடிப்பதால், இப்படத்திற்காக விரதம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அது எப்படிப்பட்ட விரதம் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாசப் படத்தில் நடித்த யாஷிகா ஆனந்தும் முக்கிய வேடம் ஒன்றில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை தொடர்ந்து யாஷிகா ஆனந்துக்கு தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்கும் வாய்ப்புகள் வந்ததால் அவர் அப்செட்டாகிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான அவருக்கு தற்போது சொல்லும்படி பட வாய்ப்புகள் இல்லாததால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
என்னதான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலும், கோலிவுட் யாஷிகா ஆனந்தை கண்டுக்கொள்வதில்லை. அப்படியே கண்டுகொண்டாலும், அவரை காண்டாக்கும் விதத்திலேயே கதாப்பாத்திரங்கள் கொடுக்கிறார்களாம்.