May 12, 2019 06:53 AM

வறுமையில் தெரு தெருவாக அலைந்த ’நீயா நானா’ கோபி!

வறுமையில் தெரு தெருவாக அலைந்த ’நீயா நானா’ கோபி!

விஜய் டிவி-யின் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவரான கோபிநாத் நடத்தும் ‘நீயா நானா’ நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, அவருக்கு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. டிவி யை தொடர்ந்து சில திரைப்படங்களிலும் கோபிநாத் நடித்து வருகிறார்.

 

மீடியா நட்சத்திரமாக இருக்கும் கோபிநாத், இதற்கு முன்பு தனது ஆரம்பகாலத்தில் வருமையில் மிகவும் கஷ்ட்டப்பட்டதோடு, பல வேலைகளையும் செய்துள்ளார்.

 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட கோபிநாத், “துணி விற்றிருக்கிறேன், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலை பார்த்திருக்கிறேன். இரவு ஹோட்டலில் வேலை செய்தேன். நான் 23 கிலோ பையை தூக்கிக் கொண்டு மாம்பலம், கே.கே நகர் போன்ற பகுதிகளில் தெருத் தெருவாக துணி விற்றிருக்கிறேன். என் வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமா, என நான் கண்ணீர் விடவில்லை.” என்று உருக்கமாக பேசினார்.