Jun 05, 2020 10:27 AM

65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்களுக்கு தடை! - அரசின் புதிய கட்டுப்பாடு

65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்களுக்கு தடை! - அரசின் புதிய கட்டுப்பாடு

கொரோனா ஊரங்கினால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் என மொத்தம் 60 பேர்களை வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.

 

இதற்கிடையே திரைப்பட படப்பிடிப்புக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும், என்று தயாரிப்பாளர்கள் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், இது குறித்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

 

இந்த நிலையில், மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அதே சமயம், 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை படப்பிடிப்பில் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. அதில் முதல் இடத்தில் இருப்பது மகாராஷ்ட்டிரா மாநிலம் தான். அங்கு இதுவரை சுமார் 70 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

தற்போது பல்வேறு மாநிலங்களில் பல தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்ட்டிரா மாநில அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம், பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள அரசு 65 வயதுக்கு மேற்பட்டவர்களை படப்பிடிப்பில் அனுமதிக்க கூடாது, படப்பிடிப்பு தளத்தில் மருத்துவ குழு இருக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொண்ட சினிமா துறையினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடை விதித்திருக்கும் கட்டுப்பாட்டை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தான்.

 

ரஜினி, கமல், சிரஞ்சீவி என இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் 65 வயதை தாண்டியுள்ளதால், மகாராஷ்ட்டிரா அரசின் இத்தகைய கட்டுப்பாட்டால் பாலிவுட் நடிகர்கள் மட்டும் இன்றி பிற மாநில நடிகர்களும் கலக்கம் அடைந்திருக்கிறார்கள்.