Oct 24, 2019 06:53 PM

’பிகில்’ படத்தின் சிறப்புக் காட்ச்சிக்கு அரசு அனுமதி வழங்கியது!

’பிகில்’ படத்தின் சிறப்புக் காட்ச்சிக்கு அரசு அனுமதி வழங்கியது!

விஜயின் ‘பிகில்’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தின் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி மறுத்துவிட்டது. மேலும், அதிக கட்டணம் இன்றி டிக்கெட் விற்பனை செய்வதாக உத்தரவாதம் கொடுத்தால் சிறப்பு காட்சி குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 

 

ஆனால், இதற்கு பட தயாரிப்பு தரப்பில் இருந்து எந்த பதிலோ அல்லது விளக்கமோ அளிக்கப்படவில்லை. இதற்கிடையே, நேற்று இரவு சிறப்புக் காட்சி திரையிடக்கூடாது என்று அனைத்து திரையரங்கங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதால், பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி இல்லை என்பது உறுதியானது. மேலும், சிறப்புக் காட்சிக்காக டிக்கெட் விற்பனை செய்த தியேட்டர்களும் பணத்தை திருப்பிக் கொடுத்தது. பிகில் படத்தால் கார்த்தியின் கைதி படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கான அனுமதி இல்லாமல் போனது.

 

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, அவருடன் செய்த ஆலோசனைக்குப் பிறகு பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும், தனது ட்விட்டர் பக்கத்தில், பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.