குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘டாப்லெஸ்’ வெப்சீரீஸ்!

’ஆரண்ய காண்டம்’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் குரு சோமசுந்தரம், தற்போது வெப்சீரீஸ்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அவர் நடிப்பில் உருவாகும் வெப்சீரிஸுக்கு ‘டாப்லெஸ்’ (Topless) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஜீ5 (zee5) மற்றும் ‘பலூன்’ திரைப்பட இயக்குநர் சிணீஷின் சோல்ஜர்ஸ் பேக்டரி (Soldiers Factory) நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த வெப்சீரிஸை தினேஷ் மோகன்லால் இயக்குகிறார்.
குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடிக்கும் இந்த டாப்லெஸ் வெப்சீரீஸில், ஹரிஷ் உத்தமன், அருண் அலெக்சாண்டர், கோகுல் ஆனந்த், பசாக் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
விஷால் விஜயன், விஷ்வேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்யும் இந்த வெப் சீரீஸ் தொடருக்கு அம்ரித் ராவ் மற்றும் அரவிந்த் வெங்கடேஷ் இசையமைக்கிறார்கள். இயக்குநர் மோகனும், எழுத்தாளர் சன்மார்கனும் இணைந்து இந்த சீரீஸின் கதையை எழுதியிருக்கிறார்கள். இந்த வெப்சீரீஸின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.
ஜெய், அஞ்சலி நடிப்பில் வெளியான ‘பலூன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிணீஷ், இந்த வெப் சீரீஸுடன், அஞ்சலியை வைத்து திரைப்படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.