Sep 12, 2019 03:54 AM

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜி.வி.பிரகாஷ்குமார்!

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜி.வி.பிரகாஷ்குமார்!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிர்காஷ் கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, லாபம் கொடுக்கிறதோ இல்லையோ, அவருக்கு பட வாய்ப்புகள் மட்டும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது.

 

இதற்கிடையே, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ மூலம் அடல்ட் ஒன்லி மூவி நடிகரான ஜி.வி.பிரகாஷுக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்த நிலையில், இனி இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன், என்று கூறியவர். தற்போது தனது படத்தின் பஸ்ட் லுக் புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

’மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ராட்சசன்’ ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்த டில்லிபாபு தயாரிக்கும் ஜி.வி.பிரகாஷின் புதிய படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் நேற்று வெளியிட்டுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் வீரர் வெளியிட்ட திரைப்பட போஸ்டர், என்ற பெருமையை பெற்ற இப்படம் தற்போது சர்ச்சையில் சிக்கியிருப்பதோடு, இதனை வெளியிட்டு தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்கையும் ரசிகர்கள் கழுவி கழுவி ஊத்துகிறார்கள்.

 

இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் பேச வைக்க வேண்டும், என்ற நோக்கத்தோடு, கேவலமான பப்ளிசிட்டி தேடும் இப்படக்குழுவினரை காய்ச்சி எடுக்கும் ரசிகர்கள், ”கேவலமா இருக்கு..இதுக்கு நீங்க விளக்கு புடிக்கமா இருந்துருக்கலாம் புலவரே” என்று ஹர்பஜன் சிங்கையும் கேவலமாக விமர்சிக்க தொடங்கியுள்ளார்கள்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

GV Prakash Kumar