Feb 16, 2019 07:56 AM
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்!

சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து நடிக்கும் படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி பிள்ளை, அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், எழில் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா கோவில் ஒன்றில் எளிமையாஜ பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.
சி. சத்யா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்குகிறது.