May 31, 2019 06:29 AM

ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷ்!

ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷ்!

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் உலகிற்கு தெரியாமல் இருக்கும் ஹீரோக்களை தேடி செல்லும் புதிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

 

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ”இது ஒரே இரவில் எடுக்கப்பட்ட அவசர முடிவு அல்ல, மிக நீண்ட காலமாக எனக்குள் மிகவும் ஆழமாக இருந்த ஒரு விஷயம். நமது சினிமா துறையில் இருந்து பலர், இத்தகைய பிரமுகர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது உண்மையே. என் சார்பாக நான் ஏதாவது செய்ய விரும்பினேன், இது என் சார்பில் ஒரு சிறிய முயற்சி.” என்றார்.

 

ஜி.வி.பிரகாஷ் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் சிலரை சந்தித்து, உரையாடுகிறார். அவர் சந்திக்கும் பிரமுகர்கள் அவர்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கோ அல்லது பல எல்லையையும் தாண்டி மிகப்பெரிய உதவி மற்றும் பங்களிப்புக்கு செய்பவர்களாக இருப்பார்கள். ஜி.வி.பிரகாஷின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் ஒளிபரப்பாகும்