ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு தம்பதிக்கு குழந்தை பிறந்தது!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார், கொரோனா பாதிப்பால் திரையுலகமே முடங்கி போகியிருக்கும் நிலையிலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பிஸியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் மனைவி சைந்தவிக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்க, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது சினிமா பிரபலங்கள் பலர் போன் மூலமாக அப்பாவான ஜி.வி.பிரகாஷுக்கும், அம்மாவான சைந்தவிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பள்ளியில் படிக்கும் போதே நண்பர்களாக இருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இடையே காதல் மரல, இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன், கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள்.
கணவர் முன்னணி இசையமைப்பாளராக பிஸியாக இருக்க, சைந்தவியும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடும் பிரபல பாடகியாக வலம் வந்த நிலையில், அவர்கள் குடும்பத்தின் புது வரவால் குடும்பமே மகிழ்ச்சியில் இருக்கிறது.